100 நாள் வேலைத்திட்டத்திற்கான போதிய நிதியை மத்திய அரசு வழங்காததால் மேற்கு வங்கத்தில் சிறப்பு நிதியம் அமைக்க உள்ளதாக முதலமைச்சர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
மத்திய அரசு தேவையான நிதியை வழங்காததால் கடந்த 4 மாதங்களாக மகாத்மா காந்தி 100 நாள் வேலைத்திட்டத்தின் கீழ் பணிபுரிவோருக்கு சம்பளம் வழங்கப்படாத நிலை உள்ளதாக மம்தா சாடினார்.
எனவே பொதுப்பணித்துறை, நீர்ப்பாசனம், வேளாண்மை போன்ற துறைகளுக்கு ஒதுக்கப்படும் நிதியின் ஒரு பகுதியைக் கொண்டு தற்போதைக்கு நெருக்கடி கால மேலாண்மை நிதி உருவாக்கப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.