பிரிக்ஸ் வெளியுறவு கூட்டத்தில் மத்திய அமைச்சர் பங்கேற்பு

பிரிக்ஸ் வெளியுறவு அமைச்சர்கள் கூட்டத்தில் இந்தியா சார்பில் மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் பங்கேற்க உள்ளதாக அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா மற்றும் தென் ஆப்பிரிக்கா ஆகிய நாடுகளை உள்ளடக்கி உருவாக்கப்பட்டது பிரிக்ஸ் அமைப்பாகும்.கூட்டமைப்பு நாடுகளில் ஏதாவது ஒரு நாட்டில் வருடா வருடம் பிரிக்ஸ் மாநாடு நடத்தப்பட்டு கூட்டமைப்பு நாடுகளுக்கு இடையே பல முக்கிய முடிவுகள் கலந்தாலோசிக்கப்பட்டு எடுக்கப்படும். அந்த வகையில் நடப்பாண்டு பிரிக்ஸ் வெளியுறவு அமைச்சர்கள் மாநாட்டின் சீனா நடத்துகிறது. காணொலி வாயிலாக இன்று நடைபெறவுள்ள இந்த கூட்டத்தில் இந்தியா சார்பில் மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் பங்கேற்க உள்ளதாக அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சீன வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் யீ தலைமையில் நடைபெறவுள்ள இந்த கூட்டத்தில் தென்னாப்பிரிக்கா, பிரேசில், ரஷ்ய, உள்ளிட்ட நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் பங்கேற்க உள்ளனர்.

Translate »
error: Content is protected !!