தமிழக பனை ஓலை பொருட்களுக்கு வடமாநிலங்களில் நல்ல மவுசு

 

தமிழக பனை ஓலை பொருட்களுக்கு வடமாநிலங்களில் நல்ல மவுசு உள்ளதால் பனை தொழிலாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தமிழக பனை ஓலை பொருட்களுக்கு வடமாநிலங்களில் நல்ல விலை கிடைப்பதால் பனைத் தொழிலாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டத்தில் சுமார் ஒரு கோடி பனை மரங்கள் உள்ளன. பனை மரத்தில் பனை ஓலை, நுங்கு, பனை மட்டை, பனங்கிழங்கு என அனைத்து பாகங்களும் பயன்தரக்கூடியது. ராமநாதபுரம் மாவட்டத்தில்  பனைமர தொழிலை நம்பி சுமார் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் உள்ளனர். பரமக்குடியில் தனியார் மகாலில் பனையோலை கைவினைப் பொருட்கள் கண்காட்சி நடைபெற்றது. ராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் நவாஸ்கனி, கைவினை பொருட்கள் தென்மண்டல மண்டல இயக்குனர் பிரபாகரன், கைவினைபொருட்கள் பயிற்சி உதவி இயக்குனர் ரூப் சந்தர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதில் ராமநாதபுரம் மாவட்டத்தில் தயார் செய்யப்படும் பனையோலை பொருட்கள் பொருட்காட்சியில் வைக்கப்பட்டிருந்தன. கொட்டான், பழக்கூடை, அரிசிக்கூடை, பனை விசிறி, குழந்தைகள் விளையாட்டு பொருட்கள், பனை தொப்பி, பனை பாய் என ஏராளமான பொருட்கள் கண்காட்சியில் இடம்பெற்றிருந்தன. கண்காட்சிக்கான ஏற்பாடுகளை பெண்கள் முன்னேற்ற அமைப்பு நிறுவனர் கல்யாணி செய்திருந்தார்.

இதுகுறித்து பனையோலை கைவினை தயாரிப்பாளர் ரோஸ் கூறுகையில்,

மத்திய, மாநில அரசு சார்பில் பனையோலைக் கைவினைப் பொருட்கள் தயாரிப்பதற்கு கடந்த ஒரு வருடமாக பயிற்சி அளிக்கப்பட்டது. இங்கு தயாரிக்கப்படும் சிறுசிறு பனையோலை பொருட்களுக்கு வடமாநிலங்களில் நல்ல மவுசு உள்ளது.தமிழகத்தில் 30 ரூபாய்க்கு விற்கப்படும் பொருட்கள் வடமாநிலங்களில் ரூபாய் 100 முதல் 200 வரை விற்கப்படுகிறது. எனவே வட மாநிலங்களில் தமிழக பனையோலை பொருட்களுக்கு நல்ல விலை கிடைக்கிறது என கூறினார்.

பனைஓலை கைவினைப் பொருட்கள் பயிற்சி அதிகாரி பிரதிஜா கூறுகையில்,

பனையோலை பொருட்களில் பலவிதமான பொருட்கள் செய்வதற்கு பெண்களுக்கு மானியத்துடன் பயிற்சி அளிக்கப்படுகிறது. முன்னர் காலம் போல் இல்லாமல் பனையோலை பொருட்களை கொண்டு முறையாக பயிற்சி அளிக்கப்பட்டு கலைநயமிக்க பொருட்கள் செய்யப்பட்டு விற்பனைக்கு அனுப்ப பயிற்சி அளிக்கபடுகிறது. குறைந்த செலவில் அதிக மதிப்புமிக்க பனையோலை பொருட்கள் செய்ய வல்லுனர்களால் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.  பனை ஓலை பொரருட்களை ஏராளமானோர் ஆர்வத்துடன் வாங்குகின்றனர் என கூறினார்.

 

Translate »
error: Content is protected !!