பிரதமர் மோடி தனி விமானம் மூலம் டெல்லி வருகை

 

ஜப்பான் சுற்றுப் பயணம் நிறைவடைந்ததை அடுத்து, பிரதமர் மோடி தனி விமானம் மூலம் டெல்லி வந்தடைந்தார். டோக்கியோ, இந்தியா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளை உறுப்பினர்களாக கொண்ட ‘குவாட்’ அமைப்பின் உச்சி மாநாடு ஜப்பானில் நடைபெற்றது. இதற்காக டோக்கியோ சென்ற பிரதமர் மோடி, பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார்.

பின்னர், குவாட் உச்சி மாநாட்டில் பேசிய பிரதமர் மோடி, குறுகிய காலத்தில் உலகில் குவாட் அமைப்பு தனக்கென ஒரு முக்கிய இடம் பிடித்துள்ளதாக தெரிவித்தார். இதனையடுத்து 2 நாள் சுற்றுப்பயணம் நிறைவு பெற்ற நிலையில் மோடி தனி விமானம் மூலம் டெல்லி வந்தடைந்தார்

 

Translate »
error: Content is protected !!