திமுக அரசு பத்திரிக்கை சுதந்திரத்தை நசுக்குவதாக குற்றம்சாட்டி அ.இ.அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் அறிக்கை வெளியிட்டுள்ளார். சமீபத்தில் G- square என்னும் கட்டுமான நிறுவனம் மற்றும் தி.மு.க.விற்கு உள்ள நெருக்கம் குறித்து நாழிதள் ஒன்றில் செய்தி வெளியானது.
இதையடுத்து கட்டுமான நிறுவனம் சார்பில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில் ஜூனியர் விகடன் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் உட்பட பலர் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது. இச்செயல்பாட்டின் மூலம், அந்த நாழிதளில் வெளியிடப்பட்ட செய்தி உண்மை என்பது நிரூப்பிக்கப்பட்டு உள்ளதாக அ.இ.அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.
இதையடுத்து G-square நிறுவனம் குறித்து விசாரித்து அரசு சார்பில் அறிக்கை வெளியிட வேண்டும், பத்திரிகை சுதந்திரத்தை பேணி காக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் வலியுறித்தியுள்ளார்.