டுவிட்டர் நிறுவனத்தின் இணை நிறுவனர் பொறுப்பிலிருந்து ஜாக் டோர்சே விலகியுள்ளார். ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனர் எலான் மஸ்க் டுவிட்டர் நிறுவனத்தை வாங்க உள்ளதாக தகவல்கள் கசிந்ததை அடுத்து, அந்நிறுவனத்தின் நிர்வாகத்தில் பல்வேறு மாற்றங்கள் நடைபெற்று வருகின்றன.
அண்மையில் டுவிட்டர் கணக்குகளில் 5 சதவீதத்துக்கும் அதிகமாக போலி கணக்குகள் இருப்பதாக குற்றஞ்சாட்டிய எலான் மஸ்க், இதனை குறைத்து நிரூபிக்காவிடில் அந்நிறுவனத்தை வாங்கும் ஒப்பந்தத்தை தொடர மாட்டேன் என நிபந்தனை விதித்திருந்தார்.
இந்தநிலையில் அந்நிறுவனத்தின் வாரிய தேர்தல் கடந்த புதன் கிழமை நடைபெற்றுள்ளது. இதில் டுவிட்டரின் இணை நிறுவனர் ஜாக் டோர்சே போட்டியிடவில்லை என கூறப்படுகிறது. இந்தநிலையில் இத்தகவலை உறுதி செய்து டுவிட் செய்துள்ள எலான் மஸ்க், ஜாக் டுவிட்டர் வாரியத்திலிருந்து விலகியிருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.