அரசு ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் முழு உடல் பரிசோதனை மையம் புனரமைக்கப்பட்ட அறுவை சிகிச்சை அரங்கம் மற்றும் மாணவர் நூலகத்தை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் திறந்து வைத்தார்.
அதன் பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர் பொதுமக்களுக்கு தேவையான மருத்துவ நடவடிக்கைகளை செய்வதற்கு பல்வேறு திட்டங்கள் மேற்கொண்டு வருகிறோம்.முழு உடல் பரிசோதனை என்பதை 1000. ரூபாய் கட்டணத்தில் அடிப்படை பரிசோதனைக்காக நடைபெற்று வருகிறது.
தைராய்டு எலும்பு பரிசோதனை உட்பட சோதனைகள் கோல்ட் சில்வர் பிளாட்டினம் என்ற திட்டத்தில் நடைபெற்று வருகிறது.ஏற்கனவே ராஜிவ் காந்தி மற்றும் ஓமந்தூரர் பகுதியில் நடைபெற்று வருகிறது. இந்த பகுதியில் துவங்குவதால் வடசென்னையில் உழைக்கும் மக்களுக்கு வசதியாக இருக்கும் என்று தெரிவித்தார். இதுவே தனியார் மருத்துவமனையில் 7000ரூபாய். ஆனால் ஸ்டான்லி மருத்துவமனையில் 1000 ரூபாய் வசதிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
மேலும் செங்கல்பட்டு விஐடி கல்லூரியில் 21ம் தேதி 6 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனுடன் தற்பொழுது 25 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. இதன் மூலம் விஐடியில் 31 பேருக்கு தொற்று உறுதி என்று தெரிவித்தார். மேலும் தோற்று பாதிக்கப்பட்டவர்களில் 80% பேர் வெளி மாநிலத்தவரும் உள்ளனர் என்று தெரிவித்தார்.
கேளம்பாக்கத்தில் உள்ள விஐடி கல்லூரியில் 410 மாணவ மாணவிகளுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. ஏற்கனவே தொற்று பாதிக்கப்பட்ட இடமான ஐஐடி, சத்ய சாய் மருத்துவ கல்லூரியில் தொற்று இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது.
விடுதியிலேயே தனிமைபடுத்தப்பட்டு கண்காணிப்பில் உள்ளனர் என்று கூறினார். மேலும் மாணவர்கள் மத்தியில் நிலவும் கஞ்சா பழக்கத்தை பற்றி பேசியவர் 6.80 கோடி மதிப்பில் 102 டன் போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டு, 25 கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டு, இதில் சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர். விரைவில் தமிழகத்தில் போதை பொருட்கள் இல்லாத நிலை என்ற நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்தார்.