டி. ராஜேந்திரனை சந்தித்து நலம் விசாரித்தார் முதலமைச்சர்

 

உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள இயக்குனர் டி. ராஜேந்திரை தமிழக முதலமைச்சர் நேரில் சந்தித்து உடல்நிலை குறித்து விசாரித்தார்.

திரைப்பட நடிகரும் இயக்குனருமான டி ராஜேந்திரன் கடந்த 19ஆம் தேதி திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது உடனடியாக சென்னை போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.  அப்போது டி ராஜேந்தர் இருக்கு வயிற்றில் ரத்தக்கசிவு ஏற்பட்டு இருப்பதாகவும் அவருக்கு உயர் சிகிச்சை வழங்க வேண்டும் என மருத்துவர்கள் கூறியதால் கடந்த 10 நாட்களாக மருத்துவமனையில் டி ராஜேந்தர் சிகிச்சை பெற்று வருகிறார்.

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் போரூர் ராமச்சந்திரா மருத்துவமனைக்கு நேரில் சென்று டி.ராஜேந்தர் உடல்நிலை குறித்து விசாரித்துள்ளார்.  மேலும் அவருக்கு என்ன மாதிரியான சிகிச்சைகள் வழங்கப்படுகிறது அவருடைய உடல்நிலை முன்னேற்றம் அடைந்து இருக்கிறதா என்பது தொடர்பான விவரங்களை மருத்துவமனை உயர் அதிகாரிகளோடு முதலமைச்சர் கேட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

 

Translate »
error: Content is protected !!