வீடியோ மீட்டிங்குகள், விர்ச்சுவல் கூட்டங்கள் போன்றவற்றிற்கு ஜூம் ஆப்ஸைப் பயன்படுத்துகிறீர்கள் எனில், உங்கள் ஆப்ஸை நீங்கள் வெகுவிரைவாக புதுப்பிக்க வேண்டும். ஏனென்றால் இதில் உள்ள பாதுகாப்புக் குறைபாடு காரணமாக ஹேக்கர்கள் உங்கள் கணினி, ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் சாதனங்களில் மால்வேர்களை நிறுவ அனுமதிக்கிறது. அறிக்கைகளின்படி, ஹேக்கர்கள் முதலில் டார்கெட் செய்த சாதனத்திற்கு ஒரு எளிய செய்தியை அனுப்புகிறார்கள், பின்னர் அந்த சாதனத்தில் சட்டவிரோதமாக மால்வேர்களை நிறுவிவிடுகின்றனர். தற்போது ஜூம் இந்த குறைபாடு இருப்பதை ஒப்புக்கொண்டுள்ளது.
அப்பாவி பயனர்களைக் குறிவைத்து, பாதிக்கப்பட்டவரின் சாதனத்தில் தீங்கிழைக்கும் குறியீடுகளைப் பொருத்தும் வகையில் இந்தச் செய்திகள் சிறப்பான முறையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. மோசமான விஷயம் என்னவென்றால் இது பயனர்களின் கணினி அல்லது தொலைபேசியில் செலுத்தப்படும்.
இந்த மால்வேரைப் பயன்படுத்தி ஆண்ட்ராய்டு, ஐபோன், விண்டோஸ் உள்ளிட்ட சாதனங்களை எளிதில் குறிவைத்து தாக்க முடியும். அனைத்து ஜூம் பயனர்களும் சமீபத்திய அப்டேட்டன V5.10.0ஐப் பதிவிறக்கம் செய்து, தீங்கிழைக்கும் இணைப்புகளைத் திறப்பதைத் தவிர்க்கவும் அல்லது செய்திகளுடன் தொடர்பு கொள்ளவும் அறிவுறுத்தப்படுகிறார்கள்.