பாட்டாளி மக்கள் கட்சியின் மாநிலத் தலைவராக பொறுப்பேற்றுள்ள அன்புமணி ராமதாஸ் சென்னை கிண்டி ஆளுநர் மாளிகையில் ஆளுநர் ஆர்.என் ரவியை சந்தித்து வாழ்த்து பெற்றார் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர்,
பாமக தலைவரானது தொடர்பாக ஆளுநரிடம் வாழ்த்துகள் பெற்றேன்bசுற்றுச் சூழல் பிரச்சனை, கல்வி, விவசாயம், காலநிலை மாற்றம், நீர் மேலாண்மை, மது, பிரச்சனை, ஆன்லைன் ரம்மி, போதைப்பழக்கம் குறித்து ஆளுநரிடம் எடுத்து கூறினேன். எங்களது கட்சி குறித்து கூறினேன், எதிர்கால காலநிலை மாற்றம் குறித்து திட்டமிட்டு இப்போதே நிதி ஒதுக்குவது குறித்து பேசினேன் என்றார்.
ஆன்லைன் ரம்மி குறித்து கூறியபோது ஆளுநர் இவ்வளவு விசயம் இருக்கிறதா என ஆச்சரியமாக கேட்டுக்கொண்டார். உரிய நடவடிக்கை எடுப்பதாக ஆளுநர் கூறினார். நீட் குறித்து கூறினேன். நான் மத்திய அமைச்சராக இருந்தபோது அப்போதைய மத்திய அரசை நீட்டை அமல்படுத்த விடாமல் தடுத்து நிறுத்தியது குறித்து கூறினேன். தமிழகத்தில் நீட் காரணமாக 50-60 மாணவர்கள் தற்கொலை செய்துள்ளனர்.
தேசிய கல்விக் கொள்கையில் தாய்மொழி கல்வி போன்ற சில விசயங்கள் சரியானவையே என்ற அவர் இந்தியாவில் தேசிய, மாநில மொழி என்றும் எதுவும் இல்லை. 22 அலுவல், இணைப்பு மொழி மட்டுமே உள்ளது. இந்தி உள்ளிட்ட மொழிகளை பிற மாநிலங்களில் திணிக்க கூடாது, தமிழகத்திற்கு இருமொழி கொள்கையே இருக்க வேண்டும் என்றார்.
கட்ட பஞ்சாயத்து, ரியல் எஸ்டேட் காரணமாக கடந்த 2 வாரமாக சென்னை பகுதியில் கொலைகள் நடக்கிறது. காவல்துறை கவனமாக இருக்க வேண்டும். அண்ணாமலை போலிஸ் தொப்பி அணிந்த மனநிலையிலேயே தற்போதும் இருக்கிறார். அதை அவர் நீக்கிவிட வேண்டும். ஊடகமின்றி முன்னேற்றமில்லை. உயிரைப் பணயம் வைத்து அரசுக்கும், மக்களுக்கும் ஊடகவியலாளர்கள் பணி செய்கின்றனர். அரசியலில் இருப்போர் ஊடகவியலாளர்கள் குறித்து நாகரிகத்தோடு பேச வேண்டும்.
பாமக 2.0 மூலம் கட்சி வளர்ச்சிக்காக புதிய யுக்திகளை பயன்படுத்த உள்ளோம். 3 மாதங்களாக கட்சியில் 2.0 திட்டத்தை செயல்படுத்தி வருகிறோம். கட்சியில் 90 விழுக்காடு பொறுப்புகளை இளைஞர்களுக்கே வழங்கி வருகிறோம். தமிழக வீரர்கள் இந்தியாவிற்காக ஒலிம்பிக்கில் தங்கம் வெல்ல வேண்டும். இறகுப்பந்து சங்க தலைவராக இதுதான் எனது ஆசை. நான் அடிப்படையில் ஒரு விளையாட்டு வீரர் என்றார். 100, 200 long jumb, high jumg, State Foot ball team captain, Volleyball foot ball போன்ற விளையாட்டுகளில் மாவட்ட, மாநில அளவில் பங்கேற்றுள்ளேன், விளையாட்டுக்கும் அரசியலுக்கு சம்பத்தம் இருக்க கூடாது, விளையாட்டில அரசியலின்றி செயல்பட வேண்டும் என தெரிவித்தார்.