மனிதாபிமான உறவுகள் குறித்து ஆப்கனில் தலிபான்களுடன் இந்தியக் குழுவினர் கலந்துரையாடல் மேற்கொண்டனர். ஆப்கனை தலிபான்கள் கைப்பற்றியதைத் தொடர்ந்து நாட்டில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டது. இந்நிலையில் 20 ஆயிரம் மெட்ரிக் டன் கோதுமை, 13 டன் மருந்துகள், 5 லட்சம் டோஸ் கொரோனா தடுப்பு மருந்துகள் உள்ளிட்டவை இந்தியா சார்பில் ஆப்கனுக்கு வழங்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து உதவிகள் குறித்து மேற்பார்வையிட இந்திய வெளியுறவுத்துறை அதிகாரிகள் காபூலுக்குச் சென்று தலிபான் தலைவர்களுடன் கலந்துரையாடினர். தலிபான்கன் ஆப்கனைக் கைப்பற்றியதற்குப் பின் இந்திய அதிகாரிகள் அங்கு பயணிப்பது இதுவே முதல்முறையாகும்.