மாணவர்கள் தன்னம்பிக்கையுடன் எதையும் வெல்லலாம் – மருத்துவ மாணவர் பிரசாந்த்

 

36 பதக்கங்களை வென்ற மருத்துவ மாணவர் பிரசாந்த் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது,

மருத்துவம் பயின்று அதற்கு எனது தூண்டுகோலாக இருந்த எனது பாட்டி ஜெயலட்சுமி எனது தாயார் சாந்தி அவர்களும் தான் என் குடும்பத்தில் நிறைய மருத்துவப் பிரச்சி னைகள் இருந்ததால், இதற்காக மருத்துவம் படிக்க வேண்டும் என்ற தாகம் ஏற்பட்டது.

அந்த ஆர்வத்தில் மெட்ராஸ் மெடிக்கல் கல்லூரியில் சேர்ந்து படித்தேன், இந்த ஆறு வருடங்களில் நிறைய மாற்றங்கள் உண்டாகியிருக்கிறது. இன்னும் பல பேரால் மருத்துவ படிப்பு மற்றும் அதற்கான பயிற்சி சரியான முறையில் கையாள முடியவில்லை, மருத்துவமனைக்கு வருகை தரும் மக்கள் மருத்துவத்தில் என்ன பலன்கள் மற்றும் தேவைகள் என்னவென்று தெரிந்து கொள்ள முடியவில்லை, எது சரியான சிகிச்சை எங்கு பார்க்கவேண்டும் எப்படிப்பட்ட மருத்துவம் தேவைப்படுகிறது என்று அவர்களுக்கு தெரிவதில்லை, இவை அனைத்தும் பூர்த்தி செய்வதற்காகவே மருத்துவ மாணவனாக வந்து சேர்ந்தேன்.

6 வருடங்களாக இங்கு சேர்ந்து சிறந்த மாணவன் பட்டத்தைப் பெற்று 36  பதக்கங்களையும் பெற்றிருக்கிறேன். துணையாக இருந்து தியாகம் செய்த எனது பாட்டி மற்றும் தாயாருக்கு நன்றி கடமைப்பட்டிருக்கிறேன். மேலும் எனது பேராசிரியர்கள் மருத்துவ துறை அதிகாரிகள் ஆகியோருக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். மாணவர்கள் தன்னம்பிக்கையுடன் செயல்பட்டால் எதையும் வெல்லலாம் என்பது இதன் மூலமாக நான் தெரிவித்துக் கொள்கிறேன். அவர்கள் நினைத்தால் என்னை விட அதிகமான பக்கங்களை வெல்லலாம்.

 

Translate »
error: Content is protected !!