தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை திரும்ப பெற வலியுறுத்தி பேரணி

 

ஆர்.எஸ்.எஸ் ஊதுகுழலாக செயல்படும் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை திரும்ப பெற வலியுறுத்தி எஸ்.டி.பி.ஐ உள்ளிட்ட கட்சியினர் பேரணி நடைபெற்றது.

சென்னை கிண்டியில் தமிழக ஆளுநரின் மாநில சுயாட்சி எதிர்ப்பு, சிறுபான்மை விரோதப் போக்கு, 7 தமிழர் விடுதலை, நீட் உள்ளிட்ட 20 மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் வழங்க மறுப்பது உள்ளிட்டவைகளை கண்டித்து எஸ்.டி.பி.ஐ கட்சியினர் மற்றும் ஜனநாயக சக்திகள் பேரணியில் ஈடுபட்டனர். இதில் எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக், மதிமுக துணை பொதுச்செயலாளர் மல்லை சத்யா, விசிக துணை பொதுச்செயலாளர் வன்னி அரசு, மே17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக்:-

தமிழக ஆளுநர் உரிமையை சட்டமன்றத்தின் இறையான்மைய மதிக்காமல் நாகலாந்து மக்களை போல் தமிழக மக்கள் அவமதிக்கும் ஆளுநர் தமிழகத்திற்கு கிடைத்துள்ளார். தமிழக ஆளுநரின் மாநில சுயாட்சி எதிர்ப்பு, சிறுபான்மை விரோதப் போக்கு, 7 தமிழர் விடுதலை, நீட் உள்ளிட்ட 20 மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் வழங்க மறுப்பது உள்ளிட்டவைகளை கண்டித்து பேரணி நடத்தினோம் என்றார். மேலும், தமிழக அரசு நிறைவேற்றிய மசோதவை கிடப்பில் போட்டுள்ளார் ஆளுநர், 7 பேர் விடுதலை, சிறுபான்மையினருக்கு எதிராக செயல்படும் ஆளுநருக்கு கண்டன்ம் தெரிவித்த அவர், ஆட்டுக்கு தாடி நாட்டுக்கு ஆளுநர் வீண் என பேரறிஞர் அண்ணா கூறியது போல் தமிழக ஆளுநர் செயல்படுகிறார். ஆர்.எஸ்.எஸ் ஊதுகுழலாக செயல்படும் ஆளுநரை திரும்ப பெற வேண்டும். ஆளுநர் தமிழகத்தை விட்டு வெளியேற வேண்டும். இல்லாவிடில் ஆளுநர் வெளியேறும் படி எங்களது அடுத்தகட்ட போராட்டங்கள் இருக்கும் என கூறினார்.

 

Translate »
error: Content is protected !!