இந்தியாவின் அடுத்த குடியரசுத் தலைவருக்கான தேர்தல்

 

இந்தியாவின் அடுத்த குடியரசுத் தலைவருக்கான தேர்தல் தேதி இன்று வெளியாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தின் பதவிக்காலம் வரும் ஜூலை 24 ஆம் தேதியுடன் முடிவடைகிறது. இந்த நிலையில் புதிய குடியரசு தலைவரை தேர்வு செய்வதற்கான நடைமுறைகள் தொடங்கியுள்ளன.

குடியரசு தலைவர் தேர்தலில், நாடாளுமன்றத்தின் இரு அவைகளின் உறுப்பினர்களைத் தவிர, அனைத்து மாநில சட்டப்பேரவைகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள், தலைநகர் டெல்லி மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட யூனியன் பிரதேச சட்டப் பேரவை உறுப்பினர்களும், குடியரசுத் தலைவர் தேர்தலில் வாக்களிக்கலாம். ஆனால், ராஜ்யசபா, லோக்சபா அல்லது சட்டப் பேரவைகளின் நியமன உறுப்பினர்களுக்கு ஜனாதிபதி தேர்தலில் வாக்களிக்கும் உரிமை இல்லை.

இந்த நிலையில் இந்தியாவின் அடுத்த குடியரசுத் தலைவருக்கான தேர்தல் தேதி இன்று பிற்பகல் 3 மணி அளவில் வெளியிட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

 

Translate »
error: Content is protected !!