105 மணி நேரத்தில் 75 கிலோமீட்டர் நீள சாலை – கின்னஸ் சாதனை

 

105 மணி நேரத்தில் 75 கிலோமீட்டர் நீள சாலையை அமைத்து தேசிய நெடுஞ்சாலை ஆணையம் கின்னஸ் சாதனை படைத்துள்ளது. ஆந்திர பிரதேசத்தில் அமராவதி முதல் மகாராஷ்டிராவின் அகோலா வரையிலான என்எச்-53 இல் இடைவிடாமல் பணியாற்றி 75 கிலோமீட்டர் நீளமுள்ள தொடர்ச்சியான சாலையை 5 நாட்களுக்குள் அமைத்து இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் உலக சாதனை படைத்துள்ளது.

அமராவதி-அகோலா நெடுஞ்சாலையின் கட்டுமானப் பணி சனிக்கிழமை காலை 6 மணிக்குத் தொடங்கி நேற்று நிறைவடைந்தது. இந்த என்எச்-53 நெடுஞ்சாலை கொல்கத்தா, ராய்பூர், நாக்பூர், அகோலா, துலே மற்றும் சூரத் ஆகிய முக்கிய நகரங்களை இணைக்கிறது. இதனை தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துக் கொண்டுள்ளார். மேலும், நெடுஞ்சாலையின் படத்தையும்,கின்னஸ் உலக சாதனைக்கான சான்றிதழையும் பகிர்ந்துள்ளார்.

 

Translate »
error: Content is protected !!