உயிரியல் சார்ந்த பொருளாதார வளர்ச்சியில் முன்னேற்றம் – பிரதமர் மோடி பெருமிதம்

உயிரியல் சார்ந்த பொருளாதார வளர்ச்சியில் இந்தியா கடந்த 8 ஆண்டுகளில் முன்னேற்றம் அடைந்துள்ளதாக பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார்.  டெல்லி பிரகதி மைதானத்தில் 2 நாட்கள் நடைபெறவுள்ள உயிரி தொழில்நுட்ப கண்காட்சியை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். இதில் தொழில் முனைவோர், முதலீட்டாளர்கள், தொழில்துறை தலைவர்கள், ஆராய்ச்சியாளர்கள், விஞ்ஞானிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு, கண்காட்சியில் அமைக்கப்பட்ட 300 ஸ்டால்களை பார்வையிட்டனர்.

முன்னதாக நிகழ்ச்சியில் உரையாற்றிய மோடி, இந்தியாவில் பல்வேறு துறை சார்ந்த  ஸ்டார்ட்அப் நிறுவனங்களின் எண்ணிக்கை 70 ஆயிரமாக உயர்ந்திருப்பதாக குறிப்பிட்டார். மேலும் இந்தியாவின் பன்முக தன்மை, பலதரப்பட்ட மக்கள், மாறுபட்ட தட்வெட்பம் ஆகியன இந்தியாவை தொழில் தொடங்க உகந்த இடமாக கருதப்படுவதாகவும், உயிரியல் துறையில் முன்னிலை வகிக்கும்  முதல் 10 நாடுகளின் பட்டியலில் விரைவில் இந்தியா இடம்பெறும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

 

Translate »
error: Content is protected !!