குடியரசுத் தலைவர் தேர்தல் குறித்த எதிர்க்கட்சிகளுடன் பேச்சுவார்த்தை

 

குடியரசுத் தலைவர் தேர்தலில் பொது வேட்பாளரை நிறுத்துவது தொடர்பாக,  எதிர்க்கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தும்படி காங்கிரஸ் மூத்த  தலைவர் மல்லிகார்ஜூன் கார்கேவிற்கு அக்கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா காந்தி உத்தரவிட்டுள்ளார்.

குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் பதவிக்காலம் நிறைவடைவதை ஒட்டி, புதிய தலைவரை தேர்ந்தெடுக்கும் தேர்தலானது ஜூலை 18ம் தேதி நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

இந்தநிலையில், மத்தியில் மீண்டும் தனது பலத்தை  நிலைநாட்ட போராடி வரும் காங்கிரஸ், எதிர்கட்சிகளை ஒன்று திரட்டி பொது வேட்பாளரை நிறுத்துவது தொடர்பாக முடிவு செய்துள்ளது.

இதற்கென ஐக்கிய ஜனநாய கூட்டணி மற்றும் பிற கட்சிகளை சேர்ந்தவர்களுடன் ஆலோசனை நடத்தி பெயர்களை பரிந்துரைக்க மல்லிகார்ஜூன் கார்கேவுக்கு சோனியா அறிவுறுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

 

 

 

Translate »
error: Content is protected !!