சர்வதேச பண நிதியத்தின் இயக்குனராக இந்தியாவின் கிருஷ்ணா ஸ்ரீநிவாசன்

 

சர்வதேச பண நிதியத்தின், ஆசிய-பசிபிக் துறையின் இயக்குனராக இந்தியாவை சேர்ந்த கிருஷ்ணா ஸ்ரீநிவாசன் நியமிக்கப்பட்டுள்ளார். இத்துறையின் இயக்குனராக இருந்த சான்கியாங் ரீ கடந்த மார்ச் 23ம் தேதி ஓய்வு பெற்றார். இதையடுத்து காலியாக இருந்த அப்பதவியில்  துணை இயக்குனராக உள்ள கிருஷ்ணா ஸ்ரீநிவாசனை அமர்த்துவது என முடிவு செய்யப்பட்டுள்ளது.

அதன்படி அவர் வருகிற 22ம் தேதி,  ஆசிய-பசிபிக் துறையின் இயக்குனராக நியமிக்கப்படுவார் என  ஐ.எம்.எப். நிர்வாக இயக்குனர் கிறிஸ்டாலினா ஜார்ஜியவா அறிவித்துள்ளார். இந்திய பொருளாதார நிபுணரான கிருஷ்ணா ஸ்ரீநிவாசன்,  இண்டியானா பல்கலைக்கழகத்தில் உதவி பேராசிரியராகவும், உலக வங்கி ஆலோசகராகவும் இருந்த நிலையில், கடந்த 27 ஆண்டுகளாக சர்வதேச நிதியத்தில் பணியாற்றி வருவது குறிப்பிடத்தக்கது.

 

 

 

Translate »
error: Content is protected !!