அதிமுகவில் ஒற்றைத் தலைமை விவகார ஆலோசனைக் கூட்டம் சூடுபிடிப்பு

 

அதிமுகவில் ஒற்றைத் தலைமை விவகாரம் சூடுபிடித்து வரும் சூழலில் மூத்த அரசியல்வாதியான பண்ருட்டி ராமச்சந்திரனை அவரது இல்லத்தில் ஓ.பன்னீர்செல்வம் சந்தித்துப் பேசினார். கடந்த நான்கு நாட்களாக அதிமுகவில் ஒற்றைத் தலைமை குறித்து தொடர்ந்து ஆலோசனைக் கூட்டங்கள் நடைபெற்று வருகிறது. அதிமுகவின் ஒருங்கிணைப்பாளரான ஓ.பன்னீர்செல்வம் தமது இல்லத்தில் தனது ஆதரவாளர்களுடன் தொடர்ந்து ஆலோசனைக் கூட்டத்தை நடத்தி வருகிறார்.

இந்நிலையில் இன்று அதிமுக மாலை அதிமுக நிர்வாகிகள் வைத்தியலிங்கம் மனோ தங்கராஜ் வேளச்சேரி அசோக் கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி ஆகிய  நிர்வாகிகள் ஆலோசனையில் ஈடுபட்டனர். தமது சொந்த ஊருக்குச் சென்றிருந்த அதிமுகவின் இணை ஒருங்கிணைப்பாளரான எடப்பாடி பழனிசாமியும் சென்னை திரும்பியுள்ளார். நாளை அதிமுகவின் தீர்மானக் குழுக் கூட்டம் அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற உள்ளது.

இந்நிலையில் பண்ருட்டி நெய்வேலி சுற்றுப்பயணம் மேற்கொண்டு இன்று சென்னை திரும்பிய மூத்த அரசியல்வாதியும், முன்னாள் அமைச்சருமான பண்ருட்டி ராமச்சந்திரனை அசோக்நகரில் உள்ள அவரது இல்லத்தில் ஓ.பன்னீர்செல்வம் சந்தித்துப் பேசினார். சுமார் 35 நிமிடங்கள் இந்தச் சந்திப்பு நடைபெற்றது. நாளை காலை ஆழ்வார்பேட்டையில் உள்ள நட்சத்திர விடுதியில் ஓ.பன்னீர்செல்வம் தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை மேற்கொள்ள உள்ள நிலையில் இந்திச்சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. மீண்டும் பசுமைவழிச் சாலை யில் உள்ள தனது இல்லத்திற்கு வந்து ஓ பன்னீர்செல்வம் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மைத்ரேயன் உடன் ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Translate »
error: Content is protected !!