இருளில் மூழ்கிய சுரங்கப்பாதை? டார்ச் லைட் மூலம் கடக்கும் பொதுமக்கள்?

சென்னையை அடுத்த பல்லாவரம் பிரதான சாலையான ஜிஎஸ்டி சாலை குறுக்கே அமைந்துள்ளது சுரங்கப்பாதை கடந்த திமுக ஆட்சி 2006 ஆம் ஆண்டு கட்டப்பட்டது இந்த சுரங்க பாதையை அப்போதைய உள்துறை அமைச்சராக இருந்த முக ஸ்டாலின் அவர்கள் திறந்து வைத்திருந்தார் இந்த சுரங்க பாதையை நெடுஞ்சாலைத்துறை பராமரித்து வருகின்றது.

இந்த சுரங்கப்பாதை பல்லாவரம் ரயில் நிலையம் பல்லாவரம் பேருந்து நிலையம் பல்லாவரம் மார்க்கெட் உள்ளிட்டவற்றை இணைக்கும் முக்கிய சுரங்கப் பாதையாக அமைந்துள்ளது இந்த சுரங்கப்பாதை வழியாக நாளொன்றுக்கு லட்சக்கணக்கானோர் கடந்து செல்கின்றன. சமீபகாலமாக இந்த சுரங்கப் பாதையில் இருள் மண்டி இருப்பதால் பொதுமக்கள் அச்சத்துடனே செல்கின்றனர்.

குறிப்பாக இந்த சுரங்கப்பாதை வழியாக செல்லும் பெண்கள் அச்சத்துடனே செல்கின்றனர் சுரங்கப்பாதை உள்ளே செல்லும்போது தங்களது கையில் இருக்கும் மொபைல் மூலம் டார்ச் லைட்டை ஆன் செய்து அந்த சுரங்கப்பாதை அச்சத்துடனே கடந்து செல்கின்றன சுரங்கப்பாதை முழுவதும் இருள் சூழ்ந்து இருப்பதால் அதிகளவு குற்ற சம்பவங்கள் நடக்க வாய்ப்புகள் உள்ளதாகவும் பொதுமக்களும் சமூக ஆர்வலரும் தெரியப் படுத்தி வருகின்றனர் மேலும் பல்லாவரம் முழுவதும் கஞ்சா விற்பனை செயின் பறிப்பு உள்ளிட்ட பல குற்ற சம்பவங்கள்  அதிக அளவு நடைபெற்று வருவதால் பொதுமக்கள் கடும் அச்சத்தில் இந்த சுரங்கப் பாதையை கடந்து செல்கின்றனர் .

மேலும் ஒரு சிலர் இந்த இருளில் இருக்கு சுரங்கப் பாதைக்கு செல்ல பயந்து சாலையிலேயே கடக்கும் நிலையும் ஏற்பட்டுள்ளது இதனால் சிறுசிறு விபத்துகள் ஏற்படும் ஆபத்துகளும் அதிக அளவு உள்ளது. நெடுஞ்சாலை துறை விரைவில் இந்த சுரங்கப் பாதையை சீர்செய்து பொதுமக்கள் அச்சமில்லாமல் பயன்படுத்தும் வகையில் சரி செய்து தர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

 

Translate »
error: Content is protected !!