அக்னிபாத் திட்டத்தை கைவிடக்கோரி இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தென்சென்னை மாவட்டம் சார்பில் சென்னை சைதாப்பேட்டை பனகல் மாளிகை அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் அக்கட்சியின் அரசியல் தலைமை குழு உறுப்பினர் ஜி ராமகிருஷ்ணன் உட்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு மத்திய அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர்:
பின்னர் செய்தியாளரிடம் பேசிய ஜி ராமகிருஷ்ணன் இளைஞர்களின் எதிர்காலத்தை கேள்விக்குறிக்கு உள்ளாக்கும் அக்னிபாத் திட்டத்தை கைவிட வேண்டும் தேசத்தின் பாதுகாப்பை காவு கொடுப்பது போல் இந்த திட்டம் இருக்கிறது மேலும் இந்த திட்டத்தின் மூலம் ராணுவ பாதுகாப்பை ஓய்வூதியத்தை பறிக்கும் ஒப்பந்த ராணுவவீரர்கள் முறையை புகுத்த வேண்டாம் என்றார்.
தொடர்ந்து பேசிய அவர் இளைஞர்களின் எதிர்காலத்தை பாதிக்கும் அக்னிபாத் திட்டத்தை கைவிடவில்லை என்றால் மிகப்பெரிய போராட்டம் நடத்தப்படும் என்றார். அதிமுகவில் ஒற்றை தலைமை இரட்டை தலைமை குறித்து நான் பதில் கூற முடியாது. இது உட்கட்சி பிரச்சனை என்றார்.