அரசு பள்ளிகளில் பயின்று உயர் கல்வி பயிலும் மாணவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் உதவித்தொகை பெறுவதற்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு இன்று தொடங்கியது. தொழில்நுட்பக் கல்வி கலை மற்றும் அறிவியல் உள்ளிட்ட இளநிலை பட்டம் பயிலும் மாணவிகள் “மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி உறுதி திட்டம்” என்ற திட்டத்தை தமிழக அரசு அறிவித்துள்ளது.
6 முதல் 12ம் வகுப்பு வரை அரசு பள்ளிகளில் பயின்ற மாணவிகள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் அதற்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு தமிழகம் முழுவதும் இன்று தொடங்கியுள்ளது. மாணவிகள் சம்பந்தப்பட்ட கல்லூரிகள் வாயிலாகவும், சமூகநலத் துறையின் இணையதளம் வாயிலாக தாங்களாகவும் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேவையான ஆவணங்கள்: கல்லூரி அடையாள அட்டை, ஆதார், வங்கி கணக்கு புத்தகம், பத்து மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு மதிப்பெண் பட்டியல், பள்ளி மாற்றுச் சான்றிதழ் ஆகியவற்றின் நகல்களை பயன்படுத்தி விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இத்திட்டத்திற்கு விண்ணப்பிக்க வரும் 30ஆம் தேதி கடைசி நாள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தகுதியான மாணவிகள் தேர்வு செய்யப்பட்டு அடுத்த மாதம் முதல் அவர்கள் கல்வி படிப்பு முடியும் வரை மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது. தற்போது தமிழகம் முழுவதும் உள்ள கல்லூரிகளில் ஆன்லைன் விண்ணப்ப பதிவு சிறப்பு முகாம் நடைபெற்று வருகிறது.
இணையதள முகவரி:
WWW.penkalvi.tn.gov.in