கோவை மாவட்ட சுகாதாரத்துறை துணை இயக்குநர் அருணா கூறுகையில், கோவையில் கடந்த சில தினங்களாக, கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது.
அதில், 80% பேருக்கு குறைந்த அளவிலான பாதிப்பும், 10% பேருக்கு அறிகுறிகள் அற்ற பாதிப்பும் ஏற்படுகிறது. பொதுமக்கள் அச்சம் கொள்ள தேவையில்லை. இருப்பினும், அரசு வழிகாட்டு நெறிமுறைகளை, கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும் என்றார்.