உக்ரைன் போர் மனித குலத்தை பேராபத்தில் தள்ளும் அபாயம்

உக்ரைன் விவகாரத்தில் மேற்குலகின் செயல்கள் மனித குலத்தை பேராபத்தில் தள்ளும் அபாயத்தை உருவாக்கி வருவதாக ரஷ்ய முன்னாள் அதிபர் டிமிட்ரி மெத்வதேவ் எச்சரித்துள்ளார். 5 மாதங்களாக நீடித்து வரும் போரால், உக்ரைன் உருக்குலைந்துள்ளதுடன் உலகப் பொருளாதாரமும் பெரும் அடி வாங்கியுள்ளது.

போர் எப்போது முடிவுக்கு வரும் என்று அனைவரும் ஏங்கி நிற்கும் நிலையில், மேலும் சில ரஷ்யாவின் அண்டை நாடுகளை உறுப்பினராக்கும் நடவடிக்கையில் நேட்டோ தீவிரம் காட்டி வருகிறது. இதனால் 3-ம் உலகப் போர் வருவது உறுதி என்ற பேச்சுகளும் எழத் தொடங்கியுள்ளன.

இந்தநிலையில் இது குறித்துப் பேசிய ரஷ்ய முன்னாள் அதிபர் மெத்வதேவ், மிகப் பெரிய அணு சக்தி ஆற்றல் கொண்ட ஒரு நாட்டை மேற்குலகம் தொடர்ந்து சீண்டுவது, மனித குலத்தை அழிவுக்கு உள்ளாக்கும் செயல் என்று எச்சரித்துள்ளார்.

Translate »
error: Content is protected !!