மெக்சிகோவில் பாண்டாக்களின் பிறந்தநாள் விழா உற்சாகம்

மெக்சிகோவின் சாபுல்டெபெக் உயிரியல் பூங்காவில் உள்ள 35 வயது ஷுவான் ஷுவான் மற்றும் 33 வயதான சின் சின் என்ற பாண்டாக்களின் பிறந்தநாள் விழா உற்சாகமாக கொண்டாடப்பட்டது.

நட்புறவுடன் சீனா பரிசாக அளித்த இரு பாண்டாக்களின் பிறந்தநாளுக்காக மெக்சிகோவின் பிறந்தநாள் பாடலான “லாஸ் மனனிடாஸ்” என்ற பாடலை பார்வையாளர்கள் பாட, பாண்டாக்கள் பிறந்தநாள் கேக்குடன் விளையாடின.

வயது முதிர்ந்தாலும் பாண்டாக்கள் நலமுடன் இருப்பதாக பூங்கா நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

Translate »
error: Content is protected !!