திருவண்ணாமலையில் முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு சிலை இன்னும் சிறிது நேரத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் திறந்து வைக்கிறார். திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் தேசிய நெடுஞ்சாலை இணையும் இடத்தில் அறிஞர் அண்ணா நுழைவாயிலை தமிழக முதல்வர் திறந்து வைத்து. மேலும் அண்ணா நுழைவாயில் அருகே உள்ள தமிழக முன்னாள் முதல்வர் கலைஞரின் 8 அடி உயரம் கொண்ட வெண்கல சிலையை தமிழக முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்து. அதன் பிறகு கட்சி கொடியினை ஏற்றி வைக்கிறார்.
பின்னர் திமுக சார்பில் நடைபெறும் பொதுக் கூட்டத்திலும் முதலமைச்சர் உரையாற்ற
உள்ளார். இதற்காக ராஜேந்திரன் என்பவரிடம் 92.5 சதுர அடி நிலத்தை ஜீவா கல்வி அறக்கட்டளை
என்ற எ.வ. வேலு க்கு சொந்தமான அறக்கட்டளையின் சார்பாக விலைக்கு வாங்கினார். இந்நிலையில் அந்த இடத்தில் சிலை அமைக்க ஏ.வ. வேலு ஏற்பாடுகளை செய்து பீடங்கள் அமைத்துள்ளார். வெண்கலத்தால் செய்யப்பட்ட கருணாநிதியின் சிலை முதல்வர் ஸ்டாலின் இன்று திறந்து வைக்கிறார்.