முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அரசு விழா

திருவண்ணாமலை மாவட்டத்தில் நடைபெற உள்ள அரசு விழாவில் ரூ.70.27 கோடி செலவில் 91 முடிவுற்ற திட்டப்பணிகளை திறந்து வைத்து, திருவண்ணாமலை நகராட்சியில் புதிய பேருந்து நிலையம் உட்பட ரூ.340.21 கோடி மதிப்பீட்டில் 246 புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, ரூ.693.03 கோடி மதிப்பில் 1,71,169 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை தமிழ்நாடு முதலமைச்சர் . மு.க.ஸ்டாலின் வழங்க உள்ளார்.

தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் திருவண்ணாமலையில் நடைபெறும் அரசு விழாவில், 70 கோடியே 27 இலட்சம் ரூபாய் செலவில் செலவில் 91 முடிவுற்ற திட்டப்பணிகளை திறந்து வைத்து, திருவண்ணாமலை நகராட்சியில் புதிய பேருந்து நிலையம் உட்பட 340 கோடியே 21 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான 246 புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, 1,71,169 பயனாளிகளுக்கு ரூ.693.03 கோடி மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை வழங்க உள்ளார்.

Translate »
error: Content is protected !!