கடந்த மாத இறுதியில் திருவள்ளூர் மாவட்டத்தின் சில பகுதிகளில் அரசியல் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த வி.கே.சசிகலா, ஜூலை 17-ம் தேதி முதல் மீண்டும் தனது அரசியல் சுற்றுப்பயணத்தைத் தொடங்குகிறார்.
அதன்படி, திருவள்ளூர் மாவட்டம் மதுரவாயல் சட்டமன்ற தொகுதியில் ஜூலை 17-ம் தேதி தனது சுற்றுப்பயணத்தை மேற்கொள்ளவுள்ளார்.
சசிகலா தனது சுற்றுப்பயணத்தை ஜூலை 17-ம் தேதி தியாகராய நகரில் உள்ள அவரது இல்லத்திலிருந்து ஆரம்பிக்கிறார். போரூர், வானகரம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பொதுமக்களையும் தொண்டர்களையும் அவர் நேரில் சந்திக்க உள்ளார்.