296 கிலோமீட்டர் நீளமுள்ள நான்குவழி விரைவுச் சாலையான புத்தேல்கண்டு விரைவுச்சாலை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார். 14 ஆயிரத்து 850 கோடி ரூபாய் மதிப்பீட்டில் இந்த சாலை திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.
நான்கு வழி சாலையாக இருந்தாலும் எதிர்காலத்தில் ஆறு வழி சாலையாக மாற்றும் வகையில் திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. மிகவும் பிரபலமான ஆக்ரா லக்னோ விரைவுச்சாலை உடன் இணையும் வகையில் இந்த சாலை திட்டம் அமைக்கப்பட்டுள்ளது.
உத்தரப் பிரதேசத்தின் முக்கியமான மாவட்டங்களான சித்ரகூட், பந்தா, மகோபா, ஹமிர்பூர், ஜலான், அவுரையா, எட்டாவா ஆகிய ஏழு மாவட்டங்கள் வழியாக இந்த விரைவு சாலை செல்கின்றது. கடந்த 2020 ஆம் ஆண்டு பிரதமர் நரேந்திர மோடியால் அடிக்கல் நாட்டப்பட்ட இந்தத் திட்டம் இருபத்தி எட்டு மாதங்களில் நிறைவடைந்துள்ளது.