பெரம்பலூர் சிறுவாச்சூர் மதுரகாளியம்மன் கோவில் திருப்பணிக்களுக்காக முறைகேடாக பணம் வசூலித்து, மோசடி செய்ததாக பாஜக ஆதரவாளரும், யூ டியூபருமான கார்த்திக் கோபிநாத்துக்கு எதிராக கோவில் செயல் அலுவலர் புகாரில் ஆவடி குற்றப்பிரிவு காவல்துறை வழக்கு பதிவு செய்யப்பட்டது.
கோயில் திருப்பணிகளுக்காக பணம் வசூலிக்க கூடாது என கோவில் செயல் அலுவலர் நோட்டீஸ் அனுப்பியதையும் மீறி கார்த்தி கோபிநாத் பணம் வசூலித்துள்ளார் என சென்னை உயர் நீதிமன்றத்தில் காவல்துறை பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
நன்கொடை வசூலிக்கக் கூடாது எனவும், அவ்வாறு வசூலித்து இருந்தால் கோவில் நிர்வாகத்திடம் ஒப்படைக்க வேண்டுமென கோவில் செயல் அலுவலர் நோட்டீஸ் அனுப்பியும் கார்த்திக் கோபிநாத் பணம் வசூலித்து உள்ளார். வெளிநாடுகளில் இருந்தும் பணம் வசூலித்திருப்பது விசாரணையில் தெரிய வந்துள்ளதால் வெளிநாட்டு நன்கொடை ஒழுங்குமுறை சட்டம் மீறப்பட்டுள்ளது. இதன் வழக்கு இறுதி விசாரணைக்காக ஜூலை 21 தள்ளிவைக்கப்பட்டுள்ளது.