காங்கிரஸ் கூட்டணி கட்சி சார்பான குடியரசுத் தலைவர் வேட்பாளர் யஷ்வந்த் சின்ஹாவிற்கு ஆம் ஆத்மி ஆதரவு அளித்துள்ளது. ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆலோசனைக் கூட்டத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது.
திரெளபதி முர்மு மீது பெரிய மரியாதை உள்ளது எனவும், ஆனாலும் யஷ்வந்த் சின்ஹாவிற்கு ஆதரவளிக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது எனவும் ஆம் ஆத்மி எம்.பி. சஞ்சய் சிங் கூறினார்.
குடியரசுத் தலைவர் தேர்தல் வரும் 18ம் தேதி நடைபெறவுள்ளது. எதிர்க்கட்சிகளின் சார்பில் பொது வேட்பாளராக யஷ்வந்த் சின்ஹா அறிவிக்கப்பட்டுள்ளார்.