கள்ளக்குறிச்சி வன்முறை சிறப்பு புலனாய்வு குழு – டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவு

கள்ளக்குறிச்சி கலவரம் தொடர்பாக பொய்யான தகவல்களை பரப்பும் வகையில் வீடியோ காட்சிகளை வெளியிட்ட youtube சேனல்களை முடக்க கூறியும், கலவரத்தை தூண்டும் வகையில் பதிவிட்ட வீடியோ பதிவுகளை நீக்கவும் டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவு பிறப்பித்துள்ளார்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள கன்னியாமூரில் கடந்த சில தினங்களுக்கு முன்பு தனியார் பள்ளி மாணவி ஸ்ரீமதி இறந்தது தொடர்பாக மாணவியின் மரணம் தொடர்பாக கூறிய விசாரணை நடத்த வேண்டும் எனக் கூறி பெரும் கலவரம் நிகழ்ந்தது.

கலவரத்தைத் தொடர்ந்து ஜூலை 31ஆம் தேதி வரை 141 தடை விதித்து மாணவி மரணம் தொடர்பான வழக்கை சிபிசி எடுக்க மாற்றி காவல்துறை இயக்குனர் டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவு பிறப்பித்து இருந்தார். இந்த நிலையில் கள்ளக்குறிச்சி கலவரம் தொடர்பாக கூறிய விசாரணை மேற்கொள்ள டி ஐ ஜி பிரவீன் குமார் தலைமையிலான 5 பேர் கொண்ட சிறப்பு குழுவை அமைத்து டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.

அதில் ராதாகிருஷ்ணன் , கிங்கஷ்ளின், திருமால், முத்து மாணிக்கம், சந்திரமௌலி ஆகிய ஐந்து உயர் அதிகாரிகள் அங்கு நடைபெற்ற வன்முறை தொடர்பாக விசாரணையை தொடங்குவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் சமூக வலைத்தளங்களில் கலவரம் தொடர்பான வீடியோக்களை வெளியிடும் நபர்களை கண்டறியவும் வாட்ஸ் அப், முகநூல் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் கள்ளக்குறிச்சி கலவரம் தொடர்பான வீடியோ பதிவுகளை வெளியிட்டு கலவரத்தை தூண்டும் வகையில் பொய்யான செய்தியை பரப்பக்கூடிய நபர்களை கண்டறிந்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கூறியும் டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.

கள்ளக்குறிச்சி கலவரம் தொடர்பாக பொய்யான செய்திகளை பரப்பியும் கலவரத்தை தூண்டு கூடிய வகைகளில் உள்ள வீடியோக்களை ஒளிபரப்பு செய்த youtube சேனலை முடக்க கூறியும் வெளியிடப்பட்ட காட்சிகளை நீக்க கூறியும் டிஜிபி சைலேந்திரபாபு அறிக்கை வெளியிட்டுள்ளார்.

Translate »
error: Content is protected !!