மன்னர் சுரோபோஜி மற்றும் மன்னர் சிவாஜியின் ஓவியம் கண்டுபிடிப்பு

தொன்மையான சுரோபோஜி மன்னர் மற்றும் அவரது மகன் சிவாஜி மன்னரின் ஓவியம் அமெரிக்காவில் இருப்பதை சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர். கடந்த 2006 ஆம் ஆண்டு பிரபல சிலை கடத்தல் மன்னன் சுபாஷ் கபூர் மூலம் இந்த ஓவியம் PEM என்ற அமெரிக்க அருங்காட்சியகத்தில் போலி ஆவணங்களால் வாங்கப்பட்டது விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் இருக்கும் ஹோம் லேண்ட் செக்யூரிட்டி பாதுகாப்பு பிரிவு விசாரணை நடத்தி போலி ஆவணங்கள் மூலம் இந்த தொன்மையான ஓவியம் வாங்கப்பட்டதால் பறிமுதல் செய்து வைத்திருந்தனர். 2015 ஆம் ஆண்டிலிருந்து இந்தியாவில் இருந்து இந்த ஓவியத்தை பெறுவதற்கான முயற்சி நடைபெறவில்லை என தெரியவந்துள்ளது.

2017 ஆம் ஆண்டு ராஜேந்திரன் என்பவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் விசாரணை மேற்கொண்டு தற்போது அமெரிக்காவிலிருந்து இந்த ஓவியத்தை இந்தியாவிற்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது.

இந்த ஓவியம் தஞ்சாவூரில் சரஸ்வதி மஹால் எனப்படும் தொன்மையான ஓவியங்கள் புத்தகங்கள் உள்ளிட்டவை அடங்கிய பகுதியில் இருந்து திருடி செல்லப்பட்டவை ஆகும். இந்த ஓவியம் 1822 முதல் 1827 ஆகிய காலகட்டத்தில் வரைந்திருக்கப்பட்டிருக்கும் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Translate »
error: Content is protected !!