முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று தலைமைச் செயலகத்துக்கு வருகை

கொரோனா தொற்றிலிருந்து முழுவதுமாக குணமடைந்து ஓய்வில் இருந்த தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று தலைமைச் செயலகத்துக்கு வருகை தந்து வழக்கமான பணிகளை மேற்கொள்ள உள்ளார். கடந்த 12ஆம் தேதி மாமல்லபுரத்தில் செஸ் ஒலிம்பியாட் குறித்து ஆய்வு செய்தபோது முதலமைச்சருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. அதற்குபின் பத்து நாட்களுக்குப் பிறகு இன்று தலைமைச் செயலகம் வருகிறார்.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கடந்த 12ம் தேதி கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. கொரோனா பாதிப்பு காரணமாக சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் கடந்த 14ம் தேதி அனுமதிக்கப்பட்டார். கொரோனா அறிகுறியினால் பரிசோதனை மற்றும் கண்காணிப்புக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் அறிவித்தது. அதன்படி, சிகிச்சை முடிந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த 18ம் தேதி மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். அவரது உடல்நிலை சீராக உள்ளதாகவும், ஒரு வார காலத்திற்கு முதலமைச்சர் ஓய்வில் இருக்கவும் மருத்துவர்கள் அறிவுறுத்தி இருந்தனர்.

மருத்துவமனையில் இருந்து வீடு திரும்புவதற்கு முன்னதாக குடியரசு தலைவர் தேர்தலுக்கான சென்னை தலைமை செயலகத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் முதல் நபராக வாக்களித்தார். அதன் தொடர்ச்சியாக வீட்டில் இருந்த படியே பணிகளை கவனித்து வந்த முதலமைச்சர் கள்ளக்குறிச்சி விவகாரம் குறித்தும் 19 தேதி அமைச்சர்கள், அதிகாரிகளுடம் காணொலி காட்சி மூலம் ஆலோசனை மேற்கொண்டார்.

இந்த நிலையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று சென்னை தலைமைச் செயலகத்துக்கு வருகை தந்து நிதித்துறை மற்றும் செஸ் ஒலிபியாட் போட்டிக்கான ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்று பல்வேறு ஆலோசனைகளை மேற்கொள்ள உள்ளார்.

வரும் 28ஆம் தேதி நேரு உள்விளையாட்டு மைதானத்தில் பிரதமர் மோடி மற்றும் முதலமைச்சர் பங்கேற்க இருக்கும் பிரம்மாண்ட தொடக்க விழா ஏற்பாடுகள் குறித்து தலைமைச் செயலாளர் இறையன்பு, டிஜிபி சைலேந்திரபாபு, சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால், பொதுத்துறை செயலாளர் ஜெகநாதன் உள்ளிட்ட அதிகாரிகள் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் மெய்யநாதன் ஆகியோர் இந்த ஆலோசனையில் பங்கேற்க உள்ளார்கள்.

அதேபோல அடுத்த மாதம் ஜி எஸ் டி கவுன்சில் கூட்டம் அனைத்து மாநில நிதி அமைச்சர்கள் மற்றும் மதிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் உட்பட பங்கேற்க உள்ளார்கள். மதுரையில் அதற்கான தேதி குறித்தும், அதற்கான ஏற்பாடுகள் குறித்தும் நிதித்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் நிதித்துறை செயலாளர் முருகானந்தம் மற்றும் உயர் அதிகாரிகள் பங்கேற்க உள்ளார்கள்.

Translate »
error: Content is protected !!