காவிரி ஆற்றில் முளைப்பாரி விட அனுமதி இல்லை

காவிரி ஆற்றில் அதிகப்படியான வெள்ளம் செல்வதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஈரோட்டில் தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக காவிரி ஆற்றில் முளைப்பாரி விட அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் ஆடிப்பெருக்கு அன்று காவிரி ஆற்றில் புனித நீராடி முளைப்பாரி விடுதல் வழக்கம்.ஈரோடு மாவட்டத்தில் காவிரி கரையில் புதுமண பெண்கள் காவிரியில் நீராடி தாலி கயிறு மாற்றுதல் மற்றும் முளைப்பாரியை விட்டு‌ வணங்குவர்.ஆனால் கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக ஆடிப்பெருக்கு விழா கொண்டாட தடை விதிக்கப்பட்டது.இந்நிலையில் தற்போது மேட்டூர் அணையில் இருந்து 50 ஆயிரம் கன அடிக்கு மேல் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் காவிரி ஆற்றில் இறங்கவோ,குளிக்கவோ, துணி துவைப்பதற்கு, கால்நடைகளை குளிப்பாட்டவோ அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.மேலும் காவிரி ஆற்றில் திறந்துவிடப்படும் நீரின் அளவு அதிகரிக்கப்படலாம் என்பதால் மூன்றாவது ஆண்டாக நாளை காவிரி ஆற்றில் முளைப்பாரி விடுதல் செய்ய தடை செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.இதுகுறித்து வருவாய் துறை சார்பில் காவிரி கரையில் தண்டோரா மூலம் எச்சரிக்கை விடப்பட்டது.

Translate »
error: Content is protected !!