மேட்டூர் அணைக்கான நீர்வரத்து 75 ஆயிரம் கன அடியாக அதிகரிப்பு

 

தமிழக காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் கன மழை பெய்து வருவதால் மேட்டூர் அணைக்கான நீர்வரத்து வினாடிக்கு 1,00,000 கனஅடியாக அதிகரிக்க வாய்ப்பு உள்ளதால் கரையோர மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு நீர்வளத்துறை அறிவுறுத்தியுள்ளது.

மேட்டூர் அணைக்கான நீர்வரத்து இன்று காலை வினாடிக்கு 51 ஆயிரம் கன அடியாக வந்த நிலையில் படிப்படியாக அதிகரித்த நீர் வரத்து தற்பொழுது வினாடிக்கு 75,000 கன அடியாக அதிகரித்துள்ளது. இதனால் 16 கண் மழைக்கால வெள்ள நீர் போக்கி வழியாக திறக்கப்பட்டு வந்த வினாடிக்கு 37,000 கன அடி தண்ணீரை 52,000 கன அடியாக அதிகரித்து வெளியேற்றப்பட்டு வருகிறது. இன்று மாலைக்குள் 16 கண் மழைக் கால வெள்ள நீர் போக்கி வழியாக வினாடிக்கு சுமார் 77,000 கன அடி அளவுக்கு வெளியேற்றுவதற்கான வாய்ப்பு இருப்பதால் கரையோர மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறும், பொதுமக்கள் யாரும் துணி துவைக்கவோ, குளிக்கவோ, மீன் பிடிக்கவோ செல்லக்கூடாது எனவும் நீர்வளத்துறை சார்பாக அறிவுறுத்தப்பட்டு வருகிறது.

Translate »
error: Content is protected !!