ஆடிப்பெருக்கை கொண்டாட மேட்டூர் வரும் பொதுமக்கள்

ஆடிப்பெருக்கை கொண்டாட மேட்டூர் வரும் பொதுமக்கள் 16 கண் மதகுகள் வழியாக பொங்கி வரும் காவிரியை கண்டு ரசித்த வண்ணம் உள்ளனர். தமிழகம் மற்றும் கர்நாடக நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக மேட்டூர் அணைக்கான நீர்வரத்து அதிகரித்த வண்ணம் உள்ளது.

நடப்பு ஆண்டை பொறுத்தவரை கடந்த மாதம் 16ஆம் தேதி மேட்டூர் அணை முழு கொள்ளளவை எட்டியது. அதன் பிறகு மேட்டூர் அணையிலிருந்து 16 கண் மதகுகள் வழியாக தண்ணீர் வெளியேற்றப்பட்டது. தொடர்ந்து பத்து நாட்களுக்கு வெளியேற்றப்பட்ட தண்ணீர் நீர் வரத்து குறைந்ததை அடுத்து நிறுத்தப்பட்டது.

அடுத்த சில நாட்களிலேயே காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் பரவலாக பெரிது வரும் கனமழையால் மேட்டூர் அணைக்கான நீர்வரத்து மீண்டும் அதிகரிக்க தொடங்கியது. இதனையடுத்து மீண்டும் 31ஆம் தேதி 16 கண் மதகுகள் வழியாக அணையில் இருந்து தண்ணீர் வெளியேற்றப்பட்டது. இன்றைய நிலவரப்படி வினாடிக்கு ஒரு லட்சத்து 41 ஆயிரம் கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

ஆடிப்பெருக்கை ஒட்டி காவிரி ஆற்றில் புனித நீராட மேட்டூர் பகுதிக்கு வரும் பொதுமக்கள் 16 கண் மதகுகள் வழியாக சீறிப்பாய்ந்து வரும் காவிரியை கண்டு ரசித்த வண்ணம் உள்ளனர்.

Translate »
error: Content is protected !!