சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 184 ரூபாய் அதிகரித்துள்ளது. கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்ட தங்கத்தின் விலை இன்று அதிகரித்துள்ளது.
அதன்படி, கிராமுக்கு 23 ரூபாய் அதிகரித்து ஒரு கிராம் ஆபரண தங்கம் 4 ஆயிரத்து 825 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. சவரனுக்கு 184 ரூபாய் அதிகரித்து ஒரு சவரன் 38 ஆயிரத்து 600 ரூபாய்க்கு விற்பனையாகிறது.
இதேபோல் வெள்ளியின் விலை கிராமுக்கு 20 காசுகள் அதிகரித்துள்ளது. அதன்படி ஒரு கிராம் வெள்ளி 63 ரூபாய் 20 காசுகளுக்கும், ஒரு கிலோ வெள்ளி 63 ரூபாய் 200 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.