எஸ்.எஸ்.எல்.வி-டி 1 ராக்கெட் தோல்வி – கவன ஈர்ப்புத் தீர்மான நோட்டீஸ்

எஸ்.எஸ்.எல்.வி – டி 1 ( SSLV-D1/EOS-02 ) ராக்கெட் மூலம் சிறிய செயற்கைக்கோள்களை நிலைநிறுத்துவதில் ஏற்பட்டுள்ள தோல்வி இஸ்ரோவின் திறன்களை மோசமான முறையில் உலகுக்கு வெளிச்சமிட்டுக் காட்டுகிறது. ‘ஸ்பேஸ் கிட்ஸ் இந்தியா’ திட்டத்தில் ஈடுபட்ட கிராமப்புற மாணவிகளின் கனவுகள் இந்தத் தோல்வியால் தகர்ந்துவிட்டன.

உலகளாவிய விண்வெளிப் பொருளாதாரத்தில் நாம் ஏற்கனவே பின்தங்கியுள்ளோம். வர்த்தகரீதியில் ராக்கெட்டுகளை ஏவுதல் தொடர்பான ( launching services ) உலகளாவிய சந்தையில் அமெரிக்கா 40% பங்கையும், ஐரோப்பா 25% மற்றும் ரஷ்யா 20% பங்கையும் வகிக்கின்றன.

ஆனால், இந்தியாவோ அந்த சேவைச் சந்தையில் 2% அல்லது அதற்கும் குறைவான பங்கையே பெற்றுள்ளது . இப்போது ஏற்பட்டுள்ள தோல்வி அதை மேலும் மோசமாக்கும்.

இதுகுறித்து விரிவான உயர்மட்ட விசாரணைக்கு அரசு உத்தரவிட வேண்டும். இந்த முக்கியமான விஷயம் குறித்து அவையில் விவாதிக்க வேண்டும். இவ்வாறு ரவிக்குமார் தனது நோட்டீஸில் தெரிவித்துள்ளார்.

Translate »
error: Content is protected !!