சீனாவில் பிறப்பு அதிக குழந்தைகள் பெறும் தம்பதிகளுக்கு வரிகள் தள்ளுபடி

சீனாவில் பிறப்பு விகிதம் மோசமாக குறைய தொடங்கியதால் அதிக குழந்தைகள் பெறும் தம்பதிகளுக்கு வரிகள் தள்ளுபடி செய்யப்படும் என்று அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. உலகிலேயே அதிக மக்கள் தொகை கொண்ட நாடாக விளங்கும் சீனாவில், மக்கள் தொகையை கட்டுப்படுத்த சில ஆண்டுகளுக்கு முன்பு ஒரு குழந்தை விதி கொண்டுவரப்பட்டது.

இதற்கிடையே அந்நாட்டில் பிறப்பு விகிதம் ஆண்டுக்கு ஆண்டு குறைந்தபடியே வந்தது. இதையடுத்து கடந்த 2016ம் ஆண்டு ஒரு குழந்தை விதி ரத்து செய்யப்பட்டது. 3 குழந்தைகள் பெற்றுக்கொள்ள தம்பதிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டது.

ஆனாலும் கடந்த 5 ஆண்டுகளாக பிறப்பு விகிதம் தொடர்ந்து சரிந்தது. அதிக வாழ்க்கை செலவு, கலாச்சார மாற்றம், சிறிய குடும்பங்கள் மீது ஆர்வம் உள்ளிட்டவைகளே குழந்தை பிறப்பு விகிதம் குறைய முக்கிய காரணங்களாகும்.

இதே காரணங்களால் கரு கலைப்பும் அதிகரித்து வந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த சீன அரசு, பிறப்பு விகிதத்தை அதிகரிக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது. அதன்படி, அதிக குழந்தைகளை பெற்றுக்கொள்ளும் தம்பதிகளுக்கு அரசு பல்வேறு சலுகைகளை அறிவித்துள்ளது.

மானியம், வரி தள்ளுபடி, சிறந்த சுகாதார காப்பீடு, கல்வி, வீட்டுக் கடன், வேலை வாய்ப்பு உள்ளிட்ட சலுகைகளை அறிவித்துள்ளது. இதன் மூலம் மக்கள் தொகை அதிகரிக்கும் என்று சீனா நம்பிக்கை கொண்டுள்ளது.

Translate »
error: Content is protected !!