ஆசிரியர்கள், மாணவர்கள் தங்களின் கையெழுத்தை தமிழில் இடவேண்டும்,எனப் பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. ஆசிரியர்கள், மாணவர்கள் தங்களின் கையெழுத்தை தமிழில் இடவேண்டும்,பள்ளி மாணவர்கள் இனிஷியலை தமிழில் தான் எழுத வேண்டும் எனப் பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.
அதேபோல், வருகைப்பதிவேடு உள்ளிட்டவற்றில் மாணவர்கள் பெயரை எழுதும்போது முன்னெழுத்தையும் தமிழிலேயே பதிவு செய்திட வேண்டும் எனத் தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
அனைத்து பதிவுகளிலும் பெயர்களை தமிழில் பராமரிக்கவும் அனைத்து முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.தமிழக அரசு ஆணையை சுட்டிக்காட்டி கல்வி ஆணையர் அறிவுறுத்தியுள்ளார்.