விடுதலை போராட்ட காலத்திலும் , திராவிட இயக்க வரலாற்றிலும் முக்கிய இடமான திருப்பூரை திமுக ஆட்சி தான் மாநகராட்சியாக தரம் உயர்த்தினோம். இப்பகுதியை சேர்ந்த முக்கிய நபர்கள் கருணாநிதியிடம் கோரிக்கை வைத்தார்கள். அப்போதே திருப்பூரை தனிமாவட்டமாக கருணாநிதி அறிவித்தார்.
திருப்பூர் என்றாலே நம் நினைவுக்கு வருவது பின்னலாடைதான். அந்தளவுக்கு தமிழக மக்களுக்கு மட்டுமல்ல, இந்தியாவின் பல்வேறு மாநில மக்களுக்கும் திருப்பூருக்கும் நெருக்கமான தொடர்பு உண்டு.
தொழிலதிபர்கள் வளரும் ஊராக மட்டுமல்லாமல், தொழிலாளி வளரும் ஊராகவும் திருப்பூர் அமைந்துள்ளது. நேற்றைய தொழிலாளி – இன்றைய முதலாளி, இன்றைய தொழிலாளி , நாளைய முதலாளி என்பது திருப்பூருக்கு பொருத்தமான சொற்கள் என குறு தொழில்துறை மண்டல மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.