ஜெர்மனியில் விமானிகள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டதால் லுப்தான்சா நிறுவனம் 800 விமானங்களை ரத்து செய்துள்ளது. 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விமானிகளுக்கு இந்த ஆண்டு 5.5 சதவீத ஊதிய உயர்வு வழங்க கோரி விமானிகள் சங்கம் கோரிக்கை வைத்துள்ளது.
இதனால் இன்று ஒரு நாள் முழுவதும் வேலைநிறுத்தத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்தது. வேலை நிறுத்தத்தால் 1,30,000 பயணிகள் பாதிப்படைந்துள்ளனர்.