தென் மாநில முதலமைச்சர்கள் கூட்டம் – உள்துறை மந்திரி அமித்ஷா தலைமை

தென் மாநில முதலமைச்சர்கள் கூட்டம், மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா தலைமையில் திருவனந்தபுரத்தில் தொடங்கியது. தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, கர்நாடகம், ஆந்திரா, தெலுங்கானா ஆகிய 6 மாநிலங்கள் தென் மண்டல கவுன்சிலில் அங்கம் வகிக்கின்றன.

இந்த தென் மண்டல கவுன்சிலில் இடம் பெற்றுள்ள தென் மாநிலங்களின் முதலமைச்சர்கள் கூட்டம், கேரள மாநிலத்தின் தலைநகரான திருவனந்தபுரத்தில் நடந்து வருகிறது. இந்த கூட்டத்தில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பசவராஜ் பொம்மை (கர்நாடகம்), ஜெகன்மோகன் ரெட்டி (ஆந்திரா), சந்திரசேகரராவ் (தெலுங்கானா) ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர்.

இந்த கூட்டத்தில் பொதுவான பிரச்சினைகளான நதிநீர் பகிர்வு, கடலோர பாதுகாப்பு, இணைப்பை ஏற்படுத்துதல், எரிசக்தி உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்படும். தென் மாநில முதலமைச்சர்கள் கூட்டத்தில் எல்லை தொடர்பாக பிரச்சினைகள், பாதுகாப்பு, சாலை, போக்குவரத்து, தொழில், நீர், எரிசக்தி, காடு, சுற்றுச்சூழல், வீட்டு வசதி, கல்வி, உணவு பாதுகாப்பு, சுற்றுலா, போக்குவரத்து உள்ளிட்ட பல விஷயங்களும் விவாதிக்கப்பட உள்ளது.

Translate »
error: Content is protected !!