காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருவதால் மேட்டூர் அணைக்கான நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது .
இன்று காலை மேட்டூர் அணையான நீர்வரத்து வினாடிக்கு 80 ஆயிரம் கன அடியாக வந்து கொண்டிருந்த நிலையில் தற்போது 90 ஆயிரம் கனியாக அதிகரித்துள்ளது.
இதனால் மேட்டூர் அணையில் இருந்து அணை மற்றும் சுரங்க மின் நிலையத்தின் வழியாக வினாடிக்கு 23 ஆயிரம் கண்ணாடி தண்ணீரும் 16 கண் மதகு பாலம் வழியாக வினாடிக்கு 67,000 கன அடி தண்ணீர் என மொத்தம் 90 ஆயிரம் கண்ணாடி தண்ணீர் காவிரியில் வெளியேற்றப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் அணைக்கு ஆன நீர் வரத்து 1.25 லட்சம் கன அடி வரை அதிகரிக்க வாய்ப்பு உள்ளதால் அணைக்கு வரும் நீர் முழுவதும் காவிரி ஆற்றில் கூடுதல் தண்ணீர் எந்த நேரத்திலும் திறக்கப்படும் என்பதால் காவிரி கரையோரத்தில் வசிக்கும் பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு மேட்டூர் நீர்வளத்துறை சார்பில் தொடர் வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது