வாரம் தோறும் செவ்வாய் கிழமை அன்று சிறுவாறுபுரி முருகன் கோயிலுக்கு அதிக பக்தர்கள் வருவது வழக்கம்.
முருகப்பெருமானை காண பல மணி நேரம் பொது தரிசனம் வரிசையில் நின்று தரிசனம் காண்பது பலருடைய வழக்கமாக இருந்து வருகிறது.
வசதி படைத்தவர்கள் முருகனை சீக்கிரம் தரிசக்க அங்கு உள்ள ஊழியர்களை பிடித்து காணிக்கையாக ஒரு கனிசமான தொகை கொடுத்து சாமி தரிசனம் செய்வது பல ஆண்டுகளாக இந்த கலாச்சரம் இருந்து வந்தது.
பொது தரிசனம் வரிசையில் நிற்பவர்கள் பல மணி நேரம் காத்து இருந்து முருகனை தரிசிக்கும் அவல நிலை ஏற்பட்டு வந்தது.
நேற்று சிறுவாபுரியில் ஏராளமான பக்தர்கள் வந்தாலும் இரண்டு மணி நேரத்துக்குள் சாமி தரிசனம் செய்தனர்.
அதற்கு காரணம் அப்பகுதி ஆய்வாளர் தான். அவர் எந்த வி.ஐ.பி.,க்களும் அனுமதிக்க வில்லை. அனைவரும் பொது தரிசனம், கட்டண தரிசனத்தில் சென்றதால் விரைவாக தரிசனம் கிடைத்தது என பக்தர்கள் மனம் மகிழ தெரிவித்தனர். மேலும் காவல் துறைக்கும் பாராட்டும் தெரிவித்தனர்.