பூமியின் சுற்றுவட்ட பாதையில் பல விண்கற்கள் கடந்து செல்கின்றன. இந்நிலையில், 2022 ஆர்கியூ என்ற பெயரிடப்பட்ட விண்கல் ஒன்று பூமியை இன்று (செப்டம்பர் 13) நெருங்கி வருகிறது.
84 அடி அகலம் கொண்ட இந்த விண்கல் மணிக்கு 49,536 கிமீ வேகத்தில் பயணித்து வருகிறது.
இதனால் பூமிக்கு எந்தவித பாதிப்பும் இல்லை என்றாலும் அதை தொடர்ந்து கண்காணிப்போம் என்று நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.