திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் சாதுக்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் பின்புறம் உள்ள மலையை சுற்றியுள்ள கிரிவலப்பாதையில் நாளுக்கு நாள் சாதுக்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது. இதனிடையே கிரிவலப்பாதையில் போலி சாமியார்கள் நடமாட்டம், கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களின் விற்பனை அதிகரித்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இதையடுத்து சாதுக்களுக்கு கியூஆர் கோடுடன் அடையாள அட்டை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் உள்ள சாதுக்களுக்கு அடையாள அட்டை வழங்கும் பணியில் மாவட்ட காவல்துறை ஈடுபட்டுள்ளது. இந்த பணிகளை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் கார்த்திகேயன் நேரில் பார்வையிட்டார்.

சாதுக்களின் கைரேகைகளை சேகரித்து அவர்கள் ஏதேனும் குற்றப் பிண்ணனிகளில் இருக்கிறார்களா என்பது குறித்தும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அப்போது இரவு நேரத்திற்கு தங்குவதற்கு இடம் உள்ளிட்ட சில கோரிக்கைகளை சாதுக்கள் முன்வைத்தனர். அவர்களிடம் அதற்கான ஏற்பாடுகளை செய்வதாக போலீசார் உறுதியளித்தனர்.

Translate »
error: Content is protected !!