சென்னையில் இயங்கும் சில அரசு மருத்துவமனைகளில் ஒரு சில மாத்திரைகள் இல்லை என மருந்தகம் கொடுக்கும் ஊழியர்கள் தெரிவித்து வருகின்றனர்.
மேலும் டாக்டர்கள் பரிந்துரை செய்யும் மாத்திரைகள் இல்லை என்றும் அதை வெளியில் வாங்கி கொள்ளவும் என்ற பதிலை மட்டும் சொல்லி விடுகின்றனர்.
படிக்காத பாமரமக்கள் எந்த மாத்திரை வெளியில் வாங்க வேண்டும் ஐயா என கேட்கும் போது பரிதாப நிலை காணமுடிகிறது.
ஒரு சில மாத்திரைகள் வசதி படைத்தவர்கள், நடுத்தர மக்கள் வாங்கி கொள்ள முடியும். வசதியற்ற அரசு மருத்துவமனையே நம்பி இருக்கும் பாமர நோயாளி மக்களின் நிலமை பரிதாபமாக தான் உள்ளது.
சுகாதார துறை அமைச்சர், செயலாளர் மற்றும் இயக்குனர்கள் கவனிப்பார்களா? நோயாளிகளின் குறைகளை போக்க அரசு முன் வரவேண்டும் என்பதே நோயாளிகளின் கோரிக்கையாகும்.