தமிழ்நாடு அரசின் ஆன்லைன் சூதாட்ட தடை சட்டத்திற்கு முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வரவேற்பு தெரிவித்துள்ளார்.
இது குறித்த அவரது ட்விட்டர் பதிவில், “ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை விதித்து அவசரச் சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது வரவேற்கத்தக்கது. இது அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் தொடர் வலியுறுத்தலுக்கு கிடைத்த வெற்றி” என பதிவு செய்துள்ளார்.